சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலி ; 100 பேர் காயம்

பெர்ன் : சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபானசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு இன்னுமதிகரிக்கிலாம் என அஞ்சப்படுகின்றது
சுவிட்சர்லாந்து நாட்டில் கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள . ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள பனிச்சறுக்கில் ஈடுபடுவோருக்கான மதுபானசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
. அங்கு மதுபான சாலைக்குள் ஏற்பட்ட வெடி விபத்தினால் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும்,100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
.
அங்கு ஆடம்பரப் பனிச்சறுக்கு விடுதிகள் நிறைந்துள்ள கிரான்ஸ் மொன்டானா என்ற நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இது குண்டுவெடிப்பு என தகவல் வெளியானது. இருப்பினும், பிறகு பொலிஸார் இது தீவிபத்து என்பதை உறுதி செய்தனர். புத்தாண்டு பிறந்து, கொஞ்ச நேரத்திலேயே, அதாவது உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
புத்தாண்டைக் கொண்டாடப் பல நூறு பேர் அங்குத் திரண்டிருந்த நிலையில், இந்தத் தீ விபத்து பெரும் துயரமான சம்பவமாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக கிரான்ஸ் மான்டானாவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பாரில் இருந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது
இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், 40 பேர் இறந்து இருக்கலாம் என்றும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
![]()