இலங்கை

3 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரையில் விசேட பூஜை இல்லை; விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவிப்பு 

தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் இடமளிக்கவில்லை என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை.

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறேன்.

அதேவேளை தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதே போன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளனர்.

இந்த விவாகரத்தில் இதுவொரு சட்டவிரோத செயல் என தீர்ப்பளிக்கப்பட்டால் எதனையும் ஏற்க நான் தயார்.

விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *