முச்சந்தி

கனடாவில் வீதியில் நின்றவர்களை மோதித்தள்ளிய வாகனங்கள்!; யாழ்ப்பாண தமிழர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி ரிச்மண்ட் ஹில் பகுதியில் மாலை வேளையில் இரண்டு வாகனங்கள் மோண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்தவரும் நீண்டகாலமாகக் கனடாவில் வசித்து வந்தவருமான 65 வயதான  ராஜதுரை துரைராஜா  என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய நிலையில், வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ரிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போதே அவர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

விபத்துக்குள்ளனான இரு வாகனங்களின் சாரதிகளும் காயமின்றி தப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சாரதிகள் மதுபோதையில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *