கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம்… ஏலையா க.முருகதாசன்

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திரு.சபா குகதாஸ் அவர்களே!
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதை எதிர்த்து இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தவது அவர்களின் வாழ்வாதார உரிமைதானே அதில் என்ன தவறு இருக்கின்றது.சரி,கடற்றொழில் அமைச்சர்தான் போராட்டம் நடத்த அவர்களைத் தூண்டினார் என்று பொதுவெளியில் சொல்லுகிறீர்கள்.உங்கள் கருத்தை ஏதோ ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொணடு பார்த்தாலும் போராட்டம் நடத்துங்கள் என மீனவர்களைத் தூண்டியதில் என்ன தவறைக் கண்டீர்;கள்.அதுவும் நோயுள்ளவர்தான் மருந்தைத் தேடிப் போக வேண்டுமென்ற இராஜதந்திர நகர்வாக இருக்கலாந்தானே.
ஒரு நாடு, தனது நாட்டைச் சிறப்பாக இயங்க வைக்க வேண்டுமென்றால் சில விடயங்களில் இராஜதந்திர முறைகள் தேவைதானே.இந்தியாவும் உலகில் உள்ள வல்லரசு நாடுகளும் இலங்கைக்கு உளவு அமைப்பு ஒற்றர்களை அனுப்பி வேவுபார்க்கலாம் இலங்:கையின் அரசியல் கட்டமைப்புகளை சிதைவடைச்செய்ய அத்தனை நயவஞ்சக நுட்பங்களையும் செய்யலாம் இலங்கை மட்டும் வல்லாதிக்கச் சக்திகளுக்கு அடிபணிய வேண்டுமோ.
இலங்கையில் நடைபெற்ற பேரிடருக்கு இந்தியா உடனடியாகவே எதிர்பார்க்காதளவிற்கு ஓடோடி வந்து உதவி செய்தார்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார8;கள் என்பதை இலங்கை மக்கள் நன்றியோடு பார்க்கிறார்கள்.அவர்களின் உதவியை என்றென்றும் இலங்கை மறக்க மாட்டுது.
அதே வேளை இலங்கைக்கு உதவி உதவி செய்வொரின் நோக்கம் உதவி செய்வது மட்டுந்தானா அல்லது இதற்குள் இலங்கையைக் கையாள்வதற்கான சூட்சமத் திட்டம் உள்ளதா என்பதை இலங்கையின் உளவுக்குழு ஆராய்வதில் தப்பில்லையே,வெளுத்ததெல்லயாம் பாலென்று நினைப்பது தனிமனிதனுக்கும் பொருந்தாது ஒரு நாட்டுக்கும் பொருந்தாது.
எங்களுடைய நாடு ஒரு சிறு தீவுதான் ,இருக்கட்டுமே,ஆனால் அதன் ஒவ்வொரு துணிக்கை மண்ணும் எமது மக்களின் மரபணுவோடு சம்பந்தப்பட்டவை.இலங்கை பெரும் வரலாற்றுச் சரித்திரத்தைக் கொண்ட எமது தேசம்.நீங்கள் நின்று பேசும் இடமும் வாழும் இடமும் இலங்கையின் வரைபுகளுக்கு உட்பட்ட இலங்கையின் சொத்து.
இந்தியாவுடனான நட்பு வேறு,இராஜதந்திர உறவு வேறு,ஆனால் எமது வளத்தைச் சுரண்டுவதை எப்படி அனுமதிக்க முடியும்.தமிழக மீனவர்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக அவர்கள் எமது மீன் வளத்தைத் திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்.
இதற்குப் பெயர் அப்பட்டமான திருட்டு.கப்பல்களை மடக்கிப் பிடித்து மாலுமிகளைத் தாக்கி கொள்ளையடிப்பது போல இதுவும் கடல் கொள்ளையே.
தமிழ்நாடு இந்தியாவின் ஆளுமைக்கும் அரசியல் கட்டமைப்புக்குள்ளும் உள்ள ஒரு மாகாணம்.தமிழ்நாட்டுக்கென சில சட்டங்களை இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் என அவர்களுக்கு உரிமையுண்டெனினும் இந்திய மத்தியரசின் உரிமைகளில் கடல்சார் உரிமை அதிகாரம் மத்திய அரசினுடையதே..
தமிழ் நாட்டு மீனவர்கள்; இந்திய மீனவர்களே.எனவே அவர்களை இந்திய மீனவர்கள் என்றுதான் விளிக்கப்படல் வேண்டும்.
திரு.சபா குகதாஸ் அவர்களே! இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடலுக்குள் வந்து மீன் பிடிப்பது இன்று நேற்று நடப்பது அல்ல.எனது அறிதலில்,நான் செய்திகளை வாசித்தறிந்து அதன் தாற்பரியத்தை அறிந்து கொணஇடு 1958லிருந்து ஆழ்கடல் ரோலர்களைக் கொண்டு இந்திய மீன் பிடித்து வருகிறார்கள் என்பது உண்மையே. அது சரியா? இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?.அத்துமீறி இலங்கைக் கடலுக்குள் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை இராணுவம் கைது செய்வது சரியே.
தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒரு தீவால் எங்களை என்ன செய்துவிட முடீயும் என்ற ஒவ்வொரு இந்திய மீனவனினதும் அகங்காரமே காரணமாகும்.
இது ஒரு இந்தியத் தனிமனிதன் இலங்கையின் இறைமையை அதன் சட்டங்களை அலட்சியம் செய்து மீறுவதாகும்.இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் வந்து மீன் பிடிப்பதை எந்தவொரு தமிழக அரசியல்வாதிகளோ,வெளிநாடுகளில் வாழுகின்ற இந்திய ஊடகவியலாளர்களோ அது தவறு என்று சொல்லவில்லையே,ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்.ஏன் கண்டிக்கத் தயங்குகிறார்கள்.
அதனால்,இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தமிழ்நாட்டின் அரசும்,அரசியல்வாதிகளும், மத்திய அரசும் இந்திய,தமிழக ஊடகங்களும் அத்துமீறி இலங்கைக் கடலுக்குள் மீன்பிடிப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதேயாகும்.
திரு.சபா குகதாஸ் அவர்களே! உங்களிடம் ஒரு கேள்வி.உங்கள் வீடடுக் காணிக்குள் இருக்கும் மாமரம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றது என்பதால் உங்களுடைய வேலிக்கு மேலால் மாங்காய்ப் பட்டை கட்டிய கொக்கத்தடியால் மாங்காய் பிடுங்குவதை எதிர்ப்பீர்களா இல்லையா..
தொடர்ந்தும் அயலவனின் அத்துமீறலை சகித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.அயல் வீட்டுக்காரனுடன் சண்டை பிடிப்பீர்கள்.காவல்துறையை நாடுவீர்கள்,ஏன் நீதிமன்றம் வரையும் போவீர்கள்.அது போலத்தான் இதுவும்.
இது இலங்கை மீனவர்களின் வாழ்வாதார உரிமைக்கான போராட்டமாகும்.
இலங்கை மக்களுக்கு இந்திய மக்களுடன் தனிப்பட்ட நட்புகள் இருக்கலாம்,அதற்குமப்பால் தமிழகத் தமிழர்களுடன் நீண்டகால நட்பு,அவர்களும் இலங்கைத் தமிழர்களும் அவ்வப்போது இரு பகுதியினரின் வீடுகளுக்கும் தமிழககத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் வீடுகளுக்கு வந்து போய் அன்பையும் நட்பையும் பரிமாறிக் கொள்பவர்களாக இருக்கலாம,உறவாடுபவர்களானகவும் இருக்கலாம். இன்னும் திருமண பந்தங்கள்கூட ஏற்படலாம் இருக்கலாம்.ஆனால் உறவு வேறு, அத்துமீறல் வேறு.அத்துமீறலை உரிமையாகவே எடுத்துக் கொள்ளக்கூடாது.
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிள் முதலில் தாங்கள் எந்த நாட்டுக் குடிமகன் என்பதை சந்தேகம் நீங்க தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
தங்களிடமிருக்கும் அடையாள அட்டை தொடக்கம்,தங்களுடைய வீடு இருக்கும் இடம்,தங்களின் அரசியல் செயல்பாடு என இன்னோரென்ன செயல்பாடுகள் மூலம் தாம் இலங்கையரா இந்தியரா என்பதை பரிசீலனை செய்வீர்களா,அல்லது பண்டாரவன்னியனை காட்டிக் கொடுத்த காக்கை வன்னியன் போல, அல்லது கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனைப் போல, அல்லது யேசுகிறீஸ்துவைக் காட்டிக் கொடுத்த அந்திரேசு போன்றவரா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.இலங்கை இந்தியாவின் மாகாணம் அல்ல.
![]()