இலக்கியச்சோலை
எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களுக்கு இலக்கிய பரிசு

இராம.செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய உலகளாவிய நாவல் போட்டியில் புதுக்கோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய உப்பிலிக்குடி எனும் நாவல் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு இலக்கியப் பரிசாக உரூபாய் 25,000 பெற்றது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்கள் அண்டனூர் சுரா அவர்களுக்குப் பரிசு கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்த நாவல் புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் ஆற்றுப்படுகையில் உப்பு மண் எடுத்து மண் உப்பு காய்ச்சிய உப்பிலி மக்களின் வாழ்வியலை புதுக்கோட்டை நிலப்பகுதியில் பாயும் அக்னி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.
இந்தப் பரிசளிப்பு விழாவில் கவிஞர் அமிர்தம் சூர்யா, அறக்கட்டளை நிறுவனர் தேவா சுப்பையா, நாற்கரம் பதிப்பகத்தார் நல்லு.ஆர்.லிங்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
![]()
எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களுக்கு பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்!
கிறிஸ்டி நல்லரெத்தினம்
நன்றிகள் சார்