முச்சந்தி

அவுஸ்திரேலிய ஆயுத கலாச்சாரம்… போர்ட் ஆர்தர் முதல் பொண்டி படுகொலை வரை!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அவுஸ்திரேலியா முழுவதும் துப்பாக்கிச் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. போர்ட் ஆர்தர் படுகொலை நடந்தன் பின் 1996இல் துப்பாக்கிகளை திரும்ப பெறும் திட்டத்தை அரசு அறிவித்தது. தேசிய பாதுகாப்பு திட்டம் மூலம் 640,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கட்டாயமாக மீளப் பெறப்பட்டது.)
நீண்ட காலமாக பாரிய அளவிலான துப்பாக்கி படுகொலைகள் இல்லாமல் இருந்த அவுஸ்திரேலிய மண்ணில் இந்த வார இறுதியில் சிட்னி பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு படுகொலையில் பலர் கொல்லப்பட்டது முழு நாட்டையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஆயுத கலாச்சாரத்தால் 1984 முதல் 1996 வரை, பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி பாரிய கவலையைத் தூண்டின. இதனால் அவுஸ்திரேலியா முழுவதும் துப்பாக்கிச் சட்டங்களை கணிசமாக கடுமையாக்கப்பட்டது. தானியங்கி மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்த தடைசெய்தது.
மேலும் ஒரு தேசிய துப்பாக்கி பதிவேட்டை நிறுவியது. துப்பாக்கி வாங்குதலுக்காக 28 நாள் காத்திருப்பு காலத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இதனால் 640,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை புழக்கத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
போர்ட் ஆர்தர் படுகொலை
1996 ஆம் ஆண்டு போர்ட் ஆர்தர் படுகொலை நடந்தது. 29 வயதான துப்பாக்கிதாரி மார்ட்டின் பிரையன்ட் இரண்டு தானியங்கி துப்பாக்கிகளால் கடை உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 35 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 23 பேர் காயமடைந்தனர்.
இந்த படுகொலை அவுஸ்திரேலிய அரசாங்கத்தை திகிலடையச் செய்தது. இதன் விளைவாக அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்றைய பிரதம மந்திரி ஜான் ஹோவர்ட் 1988 ஆம் ஆண்டு வன்முறைக்கான தேசிய குழுவின் அறிக்கையில் செய்யப்பட்ட துப்பாக்கிச் சட்டத் திட்டங்களை தேசிய துப்பாக்கி ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ள மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதன் விளைவாக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே பிணைக்கப்படாத தேசிய துப்பாக்கி ஒப்பந்தம் (NFA) ஏற்பட்டது. ஏனெனில் அவுஸ்திரேலிய அரசியலமைப்பு துப்பாக்கிச் சட்டங்களை இயற்ற நேரடி அதிகாரத்தை வழங்கவில்லை. சில மாநிலங்களின் எதிர்ப்பை எதிர்கொண்ட பிரதமர் ஹோவர்ட், துப்பாக்கிகள் மீது அரசியலமைப்பு அதிகாரத்தை வழங்க அரசியலமைப்பை மாற்ற நாடு தழுவிய வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவுறுத்தினார்.
தேசிய துப்பாக்கி ஒப்பந்தத்தில் அனைத்து தானியங்கி துப்பாக்கிகள் மீதான உரிமைக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் பல துப்பாக்கி விற்பனை நிறுவனங்கள் இதை கடுமையாக விமர்சித்தனர். சில துப்பாக்கி நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்தை பாதிக்கும் முயற்சியில் லிபரல் கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
புதிய ஆயுத திருத்தச் சட்டம் 1997இல் துப்பாக்கிகளை திரும்ப பெறும் திட்டத்தை அறிவித்தது. தேசிய பாதுகாப்பு அலுவலகம் இந்தத் திட்டம் மூலம் 640,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை கட்டாயமாக மீளப் பெற்றது. அவற்றில் பல அரை தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் 1996 சட்ட மாற்றங்களின் விளைவாக தடைசெய்யப்பட்டன.
அவுஸ்தி்ரேலிய நிகழ்ந்த படுகொலைகள்:
குறிப்பாக ஆயுத கலாச்சாரத்தால் 1984 முதல் 1996 வரை, பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி பாரிய கவலையைத் தூண்டின.
1984 மில்பெர்ரா (Milperra) படுகொலை பல்வேறு சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களுக்கு இடையிலான தொடர்ச்சியான மோதல்களில் ஒரு முக்கிய சம்பவமாகும். இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டில், ஹாடில் ஸ்ட்ரீட் படுகொலை மற்றும் குயின் ஸ்ட்ரீட் படுகொலை மெல்போர்னில் நடந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பல மாநிலங்கள் அனைத்து துப்பாக்கிகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் சுயமாக ஏற்றும் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகள் கிடைப்பதை கட்டுப்படுத்தின.
இதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் நடந்த ஸ்ட்ராத்ஃபீல்ட் (Strathfield)படுகொலையில், இரண்டு பேர் கத்தியால் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் துப்பாக்கியால் கொல்லப்பட்டனர்.
கொடூரமான இந்த தாக்குதல்களின் காரணமாக துப்பாக்கி வாங்குபவர்கள் உரிமம் பெற வேண்டும் என்று 1991 இல் டாஸ்மேனியா மாநில ஒரு சட்டத்தை இயற்றியது. இருப்பினும் அதெ அமலாக்கம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தது. இருப்பினும் டாஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்தில் துப்பாக்கிச் சட்டங்கள் நீண்ட ஆயுதங்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ட் ஆர்தர் படுகொலை:
1996 ஆம் ஆண்டில் ஏப்ரல் 28 அன்று, மார்ட்டின் பிரையன்ட் டாஸ்மேனியாவில் உள்ள போர்ட் ஆர்தர் (Port Arthur) வரலாற்று தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடிய துப்பாக்கிச் சூட்டின் கொலையாளியான
பிரையன்ட் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு பரோல் சாத்தியம் இல்லாமல் 35 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த கொடூர நிகழ்வின் காரணமாக ஆஸி தேசத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மஉடனடி அரசியல் நடவடிக்கையைத் தூண்டியதுடன், இரண்டு வாரங்களுக்குள், பிரதமர் ஜான் ஹோவர்ட் தேசிய துப்பாக்கி சட்ட ஒப்பந்தத்தை அறிவித்தார்.
இதன் விளைவாக அவுஸ்திரேலியா முழுவதும் துப்பாக்கிச் சட்டங்களை கணிசமாக கடுமையாக்கியது. இந்த ஒப்பந்தம் தானியங்கி மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகளை தடைசெய்தது. ஒரு தேசிய துப்பாக்கி பதிவேட்டை நிறுவியது. துப்பாக்கி வாங்குதலுக்காக 28 நாள் காத்திருப்பு காலத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் திட்டத்தை தொடங்கியது. இதனால் 640,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை புழக்கத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
போர்ட் ஆர்தர் படுகொலை அவுஸ்திரேலியாவின் நவீன வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக மாறியது. துப்பாக்கிகளைப் பற்றிய பொது அணுகுமுறைகளை மாற்றியமைத்து, உலகளவில் வெற்றிகரமான துப்பாக்கி கட்டுப்பாட்டு சீர்திருத்தத்தில் ஆஸி அரசு முன்னிலை வகித்தது.
பொண்டி கடற்கரை படுகொலை:
நீண்ட காலமாக பாரிய அளவிலான துப்பாக்கி படுகொலைகள் இல்லாமல் இருந்த போதிலும் இந்த வார இறுதியில் 2025 டிசம்பர் 14ம் ஞாயிறு மாலை சிட்னி பொண்டி கடற்கரையில் (Bondi Beach) யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறையின் தகவலின் படி யூத சமூகத்தினரை குறிவைத்து பொண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உட்பட 46பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யூத மக்களின் ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கடற்கரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த படுகொலைகள் நடைபெற்றன என மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் பல வெடிபொருட்கள் இருப்பதாக நம்பும் ஒரு வாகனத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவுஸ்திரேலியாவில் வெகுஜன துப்பாக்கிச் சூடுகள் மிக அரிதானவை. மேலும் இந்த சம்பவம் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவது சந்தேக நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவைஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் யூத சமூகத்தினரை குறிவைத்து பொண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை நமது நாட்டின் இதயத்தைத் தாக்கிய தீய எதிர்ப்பு, பயங்கரவாதத்தின் செயல் என்று விவரித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *