இலங்கை

அவுஸ்திரேலியா பொண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அனுர கண்டனம்

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் , இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என ஜனாதிபதி மேலும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *