முச்சந்தி

110 அடி நீளமான பாலத்துடன் வந்த இந்தியாவின் 9வது உதவி விமானம்; தொடர்ந்தும் நிவாரண உதவிகளை வழங்கும் இந்தியா

இலங்கையில் அனர்த்த மீட்புப் பணியில் ஈடுபடும் இந்தியாவின் “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவிகளுடன் 9வது இந்திய விமானம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் 110 அடி நீளம், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம், ஒரு ஜேசிபி பேக்ஹோ வாகனத்துடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையின் 13 பொறியாளர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17, நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழுவும் இதனை வரவேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *