வீ.எஸ்.கணநாதனின் இரு நூல் மெய்நிகர் வழியாக அறிமுகம்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி எதிர்வரும் 12.12.2025 வெள்ளிக்கிழமை, மாலை 7.00 மணிக்கு, மெய்நிகர் வழியாக நடைபெறவுள்ளது.
இந்த சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவரான, திரு. வீ.எஸ்.கணநாதன் அவர்களின், இரண்டு நூல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் வாசிப்பு அனுபவ ப்பகிர்வு மாலை 7:00 மணி 12-12-2025 வெள்ளிக்கிழமை நடைபெறும்.
மூத்த எழுத்தாளர் திரு. V.S. கணநாதன் எழுதிய இரு நூல்களின் மெய்நிகர் வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்வின் தலைமை உரையை திரு. பாடும்மீன் ஸ்ரீகந்தராசா அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.
சத்தியம் மீறியபோது நூல் அனுபவப் பகிர்வைதிரு. நோயல் நடேசன் அவர்களும், நிம்மதியைத் தேடி நூல் அனுபவப் பகிர்வை திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்கள் வழங்குகிறார்.
இந்த நூல் குறித்த அனுபவப் பகிர்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ZOOM DETAILS:
MEETING ID: 895382 66332
PASSCODE: 627876
நிகழ்ச்சி நேரங்கள்: இந்தியா இலங்கை: மதியம் 1:30 மணி, இங்கிலாந்து: காலை 8:00 மணி. பிரான்ஸ் – ஜெர்மனி : காலை 9:00 மணி. கனடா: அதிகாலை 3:00 மணிக்கு ஆரம்பமாகும்.

![]()