முச்சந்தி

அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள் ஹெலிக்கொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை இந்திய ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை மற்றும் இந்திய விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI 17 ஹெலிக்கொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்மலை பகுதியில் அனர்த்த நிலைமையில் சிக்கித் தவித்த இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஸ்லோவாக்கியா முதலான நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே இதன்போது மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டினர் குழு ஒன்று மீட்கப்பட்டு கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலாப் பயணிகளின் நலன் தொடர்பாக விசாரித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடம், போக்குவரத்து மற்றும் பிற வசதிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சு முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *