முச்சந்தி
போரா – சமாதானமா ? உக்ரேனின் தெரிவு என்ன?… உறுதியாக முன்னேறும் மாஸ்கோ படைகள் !!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

( தற்போது ரஷ்யப் படைகள் குப்யான்ஸ்க் (Kupiansk) நகரை
முழுமையாகக் கைப்பற்றியுள்ளன. பல உக்ரைன் வீரர்கள் சரணடைந்தும் உள்ளனர். தோல்வி மேல் தோல்வியாக கீவ் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் உள்ளன.
முழுமையாகக் கைப்பற்றியுள்ளன. பல உக்ரைன் வீரர்கள் சரணடைந்தும் உள்ளனர். தோல்வி மேல் தோல்வியாக கீவ் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் உள்ளன.இதேவேளை உக்ரைனின் எரிசக்தித் துறையில் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள லஞ்சப் பணம் கைமாறியதாகக் கூறப்படும் ஒரு பெரிய ஊழல் ஊழலால் ஜெலென்ஸ்கியின் நிலை மேலும் பலவீனமடைந்துள்ளது. இதுவே அவரது நீதி மற்றும் எரிசக்தி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யத் தூண்டியது)
குப்யான்ஸ்க்கில் மாஸ்கோவின் வெற்றி, உக்ரேனிய பாதுகாப்பு படைகளின் சரிவை தெளிவாக அறிவிக்கிறது. உக்ரேனிய இராணுவத்திற்கு குப்யான்ஸ்க் (Kupiansk)ஒரு கேந்திர முக்கியத்துவமான இடம். உக்ரைன் எந்த விலை கொடுத்தாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டிய மூலோபாய ரீதியாக முக்கியமான நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போரில் மிகத் தீவிரமான சண்டை நடந்த பிராந்தியம் குப்யான்ஸ்க் ஆகும். இந்த பிராந்தியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகரைத் தக்கவைக்க உக்ரைன் போராடி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ரஷ்யா ஸ்திரமாக டொன்பாசில் (DonBass) முன்னேறி வருகிறது.
ரஷ்யப் படைகள் குப்யான்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளன. உக்ரைன் வீரர்கள் சரணடையத் தொடங்கி உள்ளனர். ஆனால் அவர்களின் தலைமை கட்டளையிலிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
குப்யான்ஸ்க் நகரம் கைப்பற்றப்பட்டது என்று ரஷ்ய இராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் உத்தியோகபூர்வமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான ஒரு சந்திப்பின் போது தெரிவித்தார்.
ட்ரம்ப் அமைதி திட்டம்:
உக்ரைனில் உறுதியாக முன்னேறி வருகிறது ரஷ்ய படைகள். மேலும் பறிபோகும் முக்கிய நிலப்பரப்புகளால் உக்ரைனிய அரசு தொடர்ந்து திணறி வருகிறது. உக்ரைனில் ரஷ்ய படையினா் கடந்த ஒக்டோபா் மாதம் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டதாக அமெரிக்காவின் போா் ஆய்வு அமைப்பு (ISW) தெரிவித்துள்ளது.டொன்பாஸ் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் கடந்த ஒக்டோபா் மாதம் ரஷ்ய இராணுவம் தனது முழு கவனத்தை செலுத்தி தாக்குதல் நடத்தியதால்
உக்ரைனில் ஸ்திரமான முன்னேற்றத்தைக் கண்டது. தற்போது டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்ட முன்மொழிவை உக்ரேனால் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதே இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் என்று இராஜதந்திர நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முன்மொழிவுகள், டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மூலம் உக்ரைனுக்கு தெரிவிக்கப்பட்டன.
முற்றுப்புள்ளி வைக்கும் என்று இராஜதந்திர நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முன்மொழிவுகள், டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மூலம் உக்ரைனுக்கு தெரிவிக்கப்பட்டன.மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புத் தலைவர் ருஸ்தம் உமெரோவைச் சந்தித்த விட்காஃப், உக்ரைன் நீண்டகாலமாக நிராகரித்து வந்த விடயங்கள் உட்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய தூதரும் புடினின் நம்பிக்கைக்குரியவருமான கிரில் டிமிட்ரியேவ் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளில் முன்னேற்றத்தைக் காட்ட டிரம்ப் நிர்வாகம் உக்ரைன் மீது ஒப்பந்தத்தைத் திணிப்பதாக சில விமர்சனங்கள் உள்ளன.
டான்பாஸ் பகுதியை ரஷ்யாவிற்கு முழுமையாக மாற்றுவது உள்ளிட்ட விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் சமநிலையற்றவை என்றும், உக்ரைனின் இறையாண்மையைக் கூட கேள்விக்குள்ளாக்குகின்றன என்றும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளை உக்ரைன் இராணுவத்தின் ஆயுதத் திறன்களைக் குறைப்பது, மற்றும் அமெரிக்க
இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் மூலோபாய இலக்குகளை குறிவைக்கும் நீண்ட தூர ஏவுகணைகளுக்கான உக்ரைனின் நீண்டகால கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் மூலோபாய இலக்குகளை குறிவைக்கும் நீண்ட தூர ஏவுகணைகளுக்கான உக்ரைனின் நீண்டகால கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.குப்யான்ஸ்க் ரஷ்ய கட்டுப்பாட்டில்:
குப்யான்ஸ்க் நகரம் இப்போது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதே நேரத்தில் புட்டின் பரந்த போர்க்கள நிலைமையை மதிப்பாய்வு செய்து ரஷ்ய துருப்புக்களின் செயல்திறனைப் பாராட்டினார். குப்யான்ஸ்க் ஓஸ்கோல் நதிக்கு அருகிலுள்ள ஒரு முக்கிய தளவாட மையமாகும். அதன் கைப்பற்றல் பிராந்தியத்தில் ரஷ்ய நிலைகளைப் பாதுகாக்கிறது மற்றும் மேற்கு நோக்கி மேலும் நகர உதவுகிறது.
குப்யான்ஸ்க் நகரத்தை விடுவித்து ஆற்றின் இடது கரையில் உக்ரேனியப் படைகள் அழிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் சரணடைவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போர்க்களத்தில் உக்ரைனின் ஆயுதப் படைகளின் சுமார் 15 பட்டாலியன்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ரஷ்யப் படைகள் பல முனைகளில் முன்னேறி வருவதாகவும், டினெப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் சபோரோஷியே பகுதிகளில் 230 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வடக்குப் பிரிவு கார்கோவ் பிராந்தியத்தில் உள்ள வோல்சான்ஸ்கின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில், தெற்குப் பிரிவு கான்ஸ்டான்டினோவ்காவின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது மற்றும் நகர மையத்தை கைப்பற்றி உள்ளது.இதன் விளைவாக பல உக்ரேனிய வீரர்கள் சரணடையத் தொடங்கியுள்ளனர்.
கிவ் அரசு மறுப்பு:
ரஷ்ய படைகளின் தாக்குதல், சுற்றிவளைப்பு பற்றிய அறிக்கைகளை கிவ் அரசு நிராகரித்து, மாஸ்கோவின் அறிக்கைகளை மிகைப்படுத்தப்பட்டவை என்று நிராகரித்துள்ளது. இன்னும் குப்யான்ஸ்க் உக்ரைனின் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில் வோல்சான்ஸ்க் மற்றும் கிராஸ்னோர்மெய்ஸ்க் (போக்ரோவ்ஸ்க்) ஆகியவற்றில் எந்தவொரு பெரிய பின்னடைவுகளையும் மறுத்துள்ளார்.
என்னவாயினும் விளாடிமிர் ஜெலென்ஸ்கி போர்க்கள இழப்புகளைக் குறைத்துமதிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளிடம் கூடுதல் உதவிக்காக முறையிட்டுள்ளார். போர்க்களத்தில் உக்ரைனிய துருப்புக்கள் வெளியேறுதல் மற்றும் வலுவூட்டல்கள் இல்லாததையும் எதிர்கொள்கின்றனர். படைகளை அணிதிரட்டலுக்கு அதிகரித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் கிவ் தங்களை பாதுகாக்க முடியாமல், கட்டாயப்படுத்துவதாக போர் வீரர்கள் குற்றம் சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஷ்யப் படைகளின் செயல்திறன்:
கடந்த ஆகஸ்டில் உக்ரைனிடமிருந்து ரஷ்யா பல சதுர கி.மீ. நிலப்பகுதியைக் கைப்பற்றியது. இந்த வேகம் நடப்பு 2025-ஆம் ஆண்டின் சராசரி மாதாந்தம் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது.
தற்போது டொனெட்ஸ்க் பிராந்திய முழு பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக, உக்ரைனின் 22 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. இதில் 2014-ல் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரிமியா தீபகற்பமும் அடங்கும்.
![]()