31 நாட்களில் 31 நூல்கள் வெளியீடு: ஈழத்து இலக்கிய வரலாற்று பணியில் ஜீவநதி படைக்கும் வரலாற்று சாதனை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈழத்து இலக்கிய வரலாற்றில் இரண்டாவது தடவையாக (2024, 2025) வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஐப்பசி மாதம் 31 நாட்களும் ஒவ்வொரு நூல்களை வெளியீடு ஜீவநதி பதிப்பகம் வெளியீடு செய்துள்ளது.
31 நாட்களில் 31 நூல்கள் வெளியீடு:
ஈழத்து இலக்கிய வரலாற்று பணியில் ஜீவநதி படைக்கும் வரலாற்று சாதனை மிகக் காத்திரமானது. 31 நாட்களில் 31 நூல்கள் வெளியீட்டு உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு 2025 வெளியீடு செய்த நூல்களில்
புயலுக்குப் பின்னர் – தமிழ்கவி, மழைக்கால மேகம் – இராஜினி தேவி சிவலிங்கம் ஆகியன நாவல்களாகும்.
அத்துடன் சிறுகதை தொகுப்புகளாக
இருகப்பிகள் – பா.வேதநாயகம்,
அவளுக்கென்று ஓர் உலகம் – சுடரி,
மாடி வீடும் ஒரு தென்னை மரமும் – திக்குவல்லை கமால் எழுதிய நூல்களும் வெளிவந்துள்ளன.
2025 ஐப்பசி நூலக மாதத்தை முன்னிட்டு ஜீவநதி 31 நாளும் நூல்களை வெளியீட்டு இளம்
எழுத்தாளர்களுக்கு பெரும் களம் அமைத்து வருகிறது.
மேலும் கண்ணீரில் பிறக்கும் கடல் – 21 பெண்களின் பெண்ணியக் கவிதைகள் தொகுப்பு ஆசிரியர் க.பரணீதரன், காதலின் கார்காலம் – சங்கரி சிவகணேசன், போர் ஆற்றில் நனைந்த பெண் – 11 பெண்களின் போரும் பெண்களும் கவிதைத்தொகுதி – தொகுப்பாசிரியர் க.பரணீதரன்,
இரு உலகம் பல மனிதர் – ஆகசி கந்தசாமி, தென்றலின் சிறகுகள் – இந்ரா, உணர்வெழுதும் தூரிகை – தேயிலை தேசத்தவள், காற்றுக்கும் வேர்க்கும் – மீரா சிவகாமி, பல்வித கவிதைச் சோலை – பா .வேதநாயகம் ஆகியோரின் கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
நாடக நூல்களாக நேரகாலம் – குழந்தை ம.சண்முகலிங்கம், ஓட்டாண்டிகள் – குழந்தை ம.சண்முகலிங்கம், இடுக்கண் வருங்கால் – குழந்தை ம.சண்முகலிங்கம் போன்ற தொகுதிகளும் வெளிவந்துள்ளன.

மற்றும் வாய் மொழி வரலாறு நூல்களாக யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சிதம்பரநாதபிள்ளை திருச்செந்திநாதன், அலியார் பீர் முஹம்மது, விசுவாசம் ஜெகநாதன், நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் ஆகியோர் எழுதிய நூல்கள் வெளிவந்துள்ளன.
கட்டுரை தொகுதிகள் விமர்சன நூல்களில் மணம் கமழும் எமது முற்றத்து மலர்கள் – என். செல்வராஜா, படைப்பியல் நோக்கில் பார்வையும் பதிவுகளும் – மு.அநாதரட்சகன், மணம் கமழும் எமது முற்றத்து மலர்கள் தொகுதி -2 – என். செல்வராஜா, உருமாறும் பழமொழிகள் – என்.செல்வராஜா, இலக்கிய உலா – பகவதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸ், உலக கலை இலக்கிய தத்துவ வெளி – மு.அநாதரட்சகன், நினைவழியா நூல்கள் – புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், ஈழ மண்ணில் இந்திய இராணுவம் நூல் வழிப்பதிவுகள் – என்.செல்வராஜா எழுதிய கட்டுரைகள் தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன.
அத்துடன் சிறுவர் நாவலான பி. திக்குவல்லை கமால் எழுதிய பூரித்த பொன் வனம் என்ற நாவல் வெளிவந்துள்ளது. அத்துடன் அவலை நினைத்துக் கொண்டு – விவாத தொகுப்பு நூலை க.பரணீதரன் எழுதியுள்ளார்.
இந்த 31 நூல்களில் பல மனதுக்கு நிறைவை தந்துள்ளன. ஈழத்தில் முதன் முதல் வாய் மொழி வரலாறுகளை நூல்கள் ஆகிய பெருமை ஜீவநதியை சாரும். அந்தவகையில் இந்த ஆண்டும் 5 வாய் மொழி வரலாறுகள் வெளியாகி உள்ளன. அதன் படி மொத்தம் 10 வாய்மொழி வரலாறுகள் நூலாகியுள்ளன.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவலை நினைத்துக் கொண்டு – முதன் முதல் வெளி வரும் விவாத நூலாகும்.
தென்றலின் சிறகுகள், உணர்வெழுதும் தூரிகை போன்ற நூல்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது முதல் தொகுதி ஆகும். காற்றுக்கும் வேர்க்கும் – பல்கலைக்கழக காலத்தில் இருந்து கவிதை புனையும் 50 வயதை தாண்டிய மீரா சிவகாமியின் முதல் நூல்
இரு உலகம் பல மனிதர் – மல்லிகையில் 1972 களில் எழுத ஆரம்பித்த ஆகசி கந்தசாமியின்
முதல் நூலாகும். பாவிலுப்பிள்ளை வேதநாயகம் என்ற அண்ணாவியார் சிறுகதைகள் , கவிதைகள் நாடகம் பல எழுதி பிரதேச மாவட்ட மட்ட போட்டிகளில் முதல் இடங்களை பெற்றும் நூல் ஆக்க முடியாமல் இருந்தார். அவரது இரு கப்பிகள், பல்வித கவிதை சோலை என இரு நூல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் இராஜினி தேவி சிவலிங்கத்தின் முதல் நாவலாக – மழைக்கால மேகம் வெளியாகிறது.
சுடரியின் முதல் சிறுகதை தொகுப்பு அவளுக்கென்று ஓர் உலகம்.
இவ்வாறு ஜீவநதி தன்னால் இயன்ற இலக்கிய பணிகளை செய்வதுடன், இலை மறை காயாய் இருப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயல்கிறது.
இந்த நூல் வெளியீடுகளுக்கு பக்க பலமாக தி.கோபிநாத், நந்தன் தர்மபாலன் போன்ற தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பு காத்திரமானது என்று ஜீவநதி பதிப்பக பரணிதரன் தெரிவித்துள்ளார்.
![]()