கடன்களைப் பெற்று மக்களின் தலையில் கட்ட அரசு முயற்சி; வருடாந்த சடங்காகி விட்ட பட்ஜெட்

இனப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வுகளும் அற்ற வருடாந்த சடங்காகவே ஜனாதிபதியின் 2026ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற குழு தலைவரும் எம்.பியான எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சிறீதரன் எம். பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சம்பிரதாயமான சடங்காகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செல்வு நாட்டின் முக்கிய பிரச்சனையான இனப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பில் அவர் இதில் வாயும் திறக்கவில்லை. தமிழ் மக்களின் காணி பிடிப்பு அரசியல் கைதிகள் விடுதலை என எந்த ஒரு விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை.
ஆசிய வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறு பெறும் கடன்களை எந்த வகையில் இவர்கள் அடைக்கப் போகின்றார்கள். அதுவும் மக்களின் தலைகளில்தான் சுமத்தப்படும் என்றார்
![]()