இலங்கை

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் சிறந்த பல விடயங்கள் காணப்படுகின்றன

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த பல விடயங்கள் காணப்படுகின்றன. அனைத்தையும் எதிர்க்கும் நிலையில் நாங்கள் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு முழுமையான என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மனோகணேசன் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த பல விடயங்கள் காணப்படுகின்றன. அனைத்தையும் எதிர்க்கும் நிலையில் நாங்கள் இல்லை, சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சகல விடயங்களையும் அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி தனது உரையில் மலையக மக்கள் என்று குறிப்பிட்டது வரவேற்கத்தக்கது. பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை பற்றி குறிப்பிட்டார் . 200 ரூபாய் வழங்குவதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளாக குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்து 45 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளார்கள். அவ்வாறாயின் வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 8000 மில்லியன ரூபாவையேனும் ஒதுக்கியிருக்க வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் பற்றியே ஜனாதிபதி பேசினார். ஆனால் பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினை, கல்வி மற்றும் சுகாதாரம் பற்றி ஜனாதிபதி ஏதும் குறிப்பிடவில்லை. சம்பள பிரச்சினைக்கு மாத்திரம் கவனம் செலுத்த முடியாது .ஆகவே ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினை முன்வைக்க வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.அவரது உரையை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தாது என்று தோண்றுகிறது. எல்லை நிர்ணய பிரச்சினை பற்றி ஜனாதிபதி பேசுகிறார்.மீண்டும் எல்லை நிர்ணயத்துக்கு சென்றால் தேர்தல் நடத்துவது தாமதமாகும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை துரிதப்படுத்தி அதனூடாகவேணும் தீர்வை வழங்குங்கள் என்று ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன். அரசியலமைப்பை உருவாக்குவோம், உருவாக்குவோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *