உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கும் ‘கல்மேகி’ புயல்; 114 இற்கும் மேற்பட்டோர் பலி

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான புயல் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘கல்மேகி’ என்ற புயல், அப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ‘செபு’ நகரை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

இதனால் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 127 பேர் காணாமல் போயுள்ளனர், 82 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரும்பாலான இறப்புகள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நேற்று (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூறாவளி காரணமாக தாய்லாந்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *