இலங்கை

இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படுமா?; சஜித்தை இந்தியா அழைத்தது ஏன்? 

இலங்கையில் அடுத்ததாக நடக்கூடிய அரசியல் மாற்றங்களை முன்கூட்டியே புரிந்துகொண்டு, முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இந்தியா அங்கு அழைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி செயற்பாட்டாளரான நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது நிரோஷன் பாதுகாக்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவின் அழைப்பையேற்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு சென்றுள்ளார். அண்டை நாடான இந்தியாவுக்கே எமது வாசமும் நாற்றமும் முதலில் தெரியும். சஜித் பிரேமதாச முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அங்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவின் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்துள்ளார். உலகில் ஐந்தாவது உற்பத்தி பொருளாதாரம் இந்தியாவிடமே இருக்கின்றது. இதன் தொழில்நுட்ப அறிவை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையில் அடுத்ததாக ஏற்படக்கூடிய மாற்றத்தை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே சஜித் பிரேமதாச அங்கு அழைக்கப்பட்டுள்ளார். வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடியவராக சஜித் பிரேமதாசவை இந்தியா பார்க்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *