போராட்டத்தை எதிர்க்கும் சிலருக்கு அரசுடன் டீல்?; உதய கம்மன்பில

நவம்பர் 21ஆம் திகதி நுகேகொட நகரில் நடத்தப்படவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ள மறுக்கும் எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் டீல் ஏதும் இருக்கின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நவம்பர் 21ஆம் திகதி நுகேகொட நகரில் நடத்தப்படவுள்ள அரசாங்கத்திற்க எதிரான மாபெரும் மக்கள் பேரணியில் கொள்கை ரீதியிலான காரணங்களால் தாம் கலந்தகொள்ளப்பேவதில்லை என்ற ஒரு சில அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. ஆனால் கட்சியொன்றை தவிர மற்றைய கட்சிகள் இந்த போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அந்தக் கட்சி இந்தப் பேரணியில் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
அதாவது இந்தப் போராட்டத்தை அரசாங்கமும் எதிர்க்கட்சியில் உள்ள கட்சியொன்றுமே விமர்சிக்கின்றன. என்றால் அந்தக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே டீல் உள்ளது என்பது தெளிவாகின்றது. அரசாங்கத்திற்கு எதிரான கூட்டத்திற்கு அரசாங்கம் பயப்படுவதை புரிந்துகொள்ளலாம். ஆனால் எதிர்க்கட்சி பயப்படுவது ஏன்?
கொள்கை ரீதியிலான இணக்கப்பாடுகள் இல்லாமையினாலேயே குறிப்பிட்ட கட்சிகள் இந்த போரட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற கூறப்பட்டது. அது தவறான கருத்தாகும். கொள்கை ரீதியிலான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள இது அரசாங்கத்தினால் அமைக்கப்படும் அமைப்பு அல்ல. அரசாங்கத்திற்கு எதிரான பேரணி மாத்திரமே. வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு வேண்டுமா? என்றார்.
![]()