இலங்கை

சாணக்கியனுக்கும் பாதுகாப்பு அதிகரிப்பு; அமைச்சர் ஆனந்த விஜேபால 

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில் அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை,உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர், முன்னதாக, பாதுகாப்புக்கோரி, பொலிஸ் அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சிறந்த ஒருவரை தெரிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *