இலங்கை

செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையாம்!; சமல் ராஜபக்ச திட்டவட்டம்

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரி இஷாரா செவ்வந்தியை வெளிநாட்டில் வைத்து இலங்கைப் பொலிஸ் படை கைது செய்ததை நாம் வரவேற்கின்றோம். இந்த இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இஷாரா செவ்வந்தியிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்த வேண்டும். பாதாள உலகக் குழுவினர் தமது விருப்பப்படி இஷாரா செவ்வந்தியை இயக்கியுள்ளனர். அவரைச் சும்மா விட முடியாது. அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரினதும் பெயர் விவரங்களையும் அரசு வெளியிட்டு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சமூக ஊடகங்களில் வெளிவரும் போலித் தகவல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *