இலங்கை
விவசாயிகளை ஏமாற்றுவதுதானா சிஸ்டம் சேன்ஞ்..?; முத்துநகர் விவசாயிகள் கொந்தளிப்பு

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் 39 ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர்.
தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார்.
விவசாய நீர்ப்பாசன குளங்களை அழித்தும் பொய்களை கூறி வருவதுதானா இவர்களின் சிஷ்டம் சேன்ஜ் எனவும் விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.




![]()