கவிதைகள்
“அரனின் மைந்தன் ஆலயம் இருப்பார்” ….. கவிதை …… கந்தசஷ்டிச் சிந்தனை – 5ம் நாள்…. ஜெயராமசர்மா.

கந்த புராணம் கலாசாரம் ஆனது
நொந்திடு மனத்துக்கு ஒளடதம் ஆனது
ஆலயந் தோறும் கந்தனின் புராணம்
படிப்பது என்பது பக்தியின் நிலையே
ஆறு நாட்களும் ஆறு முகனை
சோறு தண்ணி தவிர்தே நிற்பார்
வீர வேலன் வெற்றித் திருமகன்
பாதம் பணிந்து நோற்பார் விரதம்
இளையோர் முதியோர் யாவரும் இணைவார்
சளையா திருந்து விரதம் பிடிப்பார்
ஆறு நாளையும் பேறாய் எண்ணி
அரனின் மைந்தன் ஆலயம் இருப்பார் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா
![]()