பொருந்தாத உடல்களை ஒப்படைத்த ஹமாஸ் – கடும் கோபத்தில் இஸ்ரேல்

உடலங்களை ஒப்படைப்பதில் ஹமாஸால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும் ஹமாஸால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட, நான்கு உடலங்களில் ஒன்று, தமது நாட்டின் எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்ட முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 48 பணயக்கைதிகளையும் ஹமாஸ் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளும், ஏழு பணயக்கைதிகளின் உடலங்களும், இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு ஒப்படைக்கப்பட்ட நான்கு உடலங்களில் ஒன்று, எந்த பணயக்கைதிகளுடன் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
![]()