இலங்கை

யாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான நிதி மோசடி

யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் (14) கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியதைத் தொடர்ந்து
14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *