உலகம்

இடிந்து விழுந்த பாடசாலை கட்டிடம் ; 61 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ம் திகதி இடிந்து விழுந்தது.

இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கியதுடன். மீட்புக்குழுவினர் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் 14 பேர் உயிரிழந்தனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. அதிகாரிகள் இந்த விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *