இலங்கை

சிறைக்குள் தள்ள அரசு முயல்கிறது; அஞ்சமாட்டோம் என்கிறார் நாமல்

எங்களை கைது செய்து சிறைகளுக்கு தள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பெல்மடுலையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே நாமல் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கத்தினால் வேலை செய்ய முடியாத போது எங்களின் வாய்களை மூடுவதற்கும் எங்களை முடக்குவதற்கும் முயற்சிக்கின்றது. சிறைச்சாலைகளையும் காண்பிக்கின்றது. அவற்றுக்கு பயந்து நாங்கள் அரசியல் செய்வதில்லை. பொய் சாட்சிகளை உருவாக்கி எங்களை சிறைகளுக்குள் தள்ளுவதற்கு முயற்சித்தாலும் அது வெற்றியளிக்காது. மனசாட்சிக்கு இணங்க நாங்கள் தவறு செய்யவில்லை. இதனால் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துங்கள், தேவையில்லாத தலையீடுகளை நிறுத்துங்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம்.

இதேவேளை இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு காலையிலும் மாலையிலும் நானே தெரிகின்றேன். சிலர் கனவிலும் நாமல் என்று கூறுகின்றனர். ஆனால் நீங்கள் என்னைப் பற்றி கனவு காணமால் மக்களின் கனவை நனவாக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *