உலகம்

ஆஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – 100 முறை சுட்ட மர்ம நபர் – பலர் காயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் பயங்கரவாத செயலோ குண்டர் கும்பல் தாக்குதலோ அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 60 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இரு ரைபிள் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர் துப்பாக்கியால் 100 முறை சுட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அவர் கார்களையும் காவல்துறையினரையும் குறிவைத்ததாகக் கூறப்படுகின்றது. பலத்த சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறினர்.

பிடிபட்ட நபர் மீது இதுவரை குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்படுவது அரிதாகும்.

ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *