இந்தியா

மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் – ஒருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு 20 பேர் கொண்ட குழு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி பிரசார கூட்டம் நடைபெற்றது.

இதன்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என விஜய் அறிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *