இந்தியா

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வைத்தியசாலையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் இருக்கும் தகவலை அறிந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் அவர் குணம் அடைய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *