இலங்கை

குண்டை சுத்தியலால் அடித்த போது வெடித்ததில் இருவர் படுகாயம்

ஆனையிறவு தட்டுவன்கொட்டிப் பகுதியில் வீடு ஒன்றில் இருந்த குண்டொன்றை சுட்டியலினால் தட்டிய இருவர் அது வெடித்ததில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை(29) நண்பகல் 11:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆனையிறவு தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த அனுராஜ் (வயது- 25) மற்றும் கொடிகாமத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் (வயது- 50) ஆகிய இருவரும் கால், கைகள் பெரிதும் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வீட்டில் காணப்பட்ட குண்டை எடுத்து சுத்தியலால் அடித்த போது பெரும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *