உலகம்

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம்

” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.

தொடர்ந்து மோதலைத் தூண்டுவது போல, இந்த அமைப்பில் சிலர் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முற்படுகிறார்கள்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும் ” எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில் டிரம்ப் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *