உலகம்

H-1B விசா கட்டணத்தை அதிகரித்த ட்ரம்ப் – இந்தியர்களுக்கு சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *