இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது – மோடி

இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் எமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை என தெரிவித்தார்.

குஜராத்தின் பாவ்நகரில் 34,200 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை இன்று ஆரம்பித்து வைத்து கருத்துரைத்த போதே பிரதமர் மோடி, இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்துரைத்த அவர்,

“நமது மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும்.

நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது.

நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும்.
இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வு.

இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 06 முதல் 07 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை.

காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *