இலங்கை

சம்பளம் கட்சி நிதியத்திற்கு செல்லும் போதும் கோடீஸ்வரர்களாக மாறும் அமைச்சர்கள்!

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துக்கள் வளர்ச்சியடைவதாகவும், இது உலகின் எட்டாவது அதிசயமே என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர்களின் சம்பளம் கட்சி நிதியத்திற்கு செல்வதாகவே கூறுகின்றனர். அப்படியென்றால் அவர்கள் எப்படி கோடீஸ்வரர்களாக மாறினர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது உண்மையில் உலகின் எட்டாவது அதிசயமே. இது நிச்சயமாக அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாகவும் இருக்கலாம். நிச்சயமாக எதிர்கால அரசாங்கத்தில் 159 பேரும் சிக்க வேண்டி வரலாம்.

மேலும் சில அமைச்சர்கள் தங்கள் செல்வம் அதிகரிக்கும் போது கொழுத்து விடுகிறார்கள். அவர்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். அவர்கள் இதற்கு முன்பு ருசிக்காத சில உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் வயிறு வளர்ந்துள்ளது. என்றே சமூக வலைத்தளங்களில் கூறப்படுகின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *