உலகம்

ஐரோப்பாவுக்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதற்கமைய ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் டிரம்ப் நேரடி பேச்சு நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.

இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரிவித்தது.
இதனையடுத்து உக்ரைன் போர் நிறுத்த பேச்சு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷ்யா அறிவித்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு உதவ பல பில்லியன் டொலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் தேடிவருவதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலால் கோபமடைந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி, தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது திருட்டுக்கு சமம் என ரஷ்யா காட்டமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *