இலங்கை

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்க் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யுமே காரணம்

திட்டமிட்ட வகையில் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்ட மைக்கு ஜே .வி.பி.யும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம்சாட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்,.மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறினார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமைக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அந்த அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றிப்பெற்றதை யடுத்து அதன் மாகாண சபைத் தேர்தல் வெற்றியை தடுப்பதற்காகவே திட்டமிட்ட வகையில் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.இதற்குஜே .வி.பி.யும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கின .

அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார் .அவ்வாறெனில் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்தலாம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் எடுக்க வில்லை.மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் நாம் முழுமையாக ஒத்துழைப்போம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *