இலங்கை

‘மகிந்தவின் காற்றில் நாமலின் வாசம்’; புதிய அரசியல் முயற்சி

“மகிந்த சுலகின் நாமல் முர்தா” (மஹிந்தவின் காற்றில் நாமலின் வாசம்) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பிறகு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பதவியை இழந்த பிறகு “Mahinda Sulanga” இயக்கம் தொடங்கப்பட்டது போலவே, குறித்த புதிய அரசியல் முயற்சியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ச விரைவில் கொழும்புக்கு திரும்புவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

தேவையான வசதிகள் அனைத்தும் கிடைத்தவுடன் மகிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்புக்கு திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் ஓய்வு வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும் வழங்குவது அரசின் கடமைகளின் ஒரு பகுதியாகும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *