உலகம்

மணிலா குடியிருப்பு பகுதியில் தீ; 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியில்

பிலிப்பைன்ஸ்ஸின் மணிலா நகரில் குடியிருப்புப் பகுதியொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ வேகமாகப் பரவி, மக்கள் குடியிருப்புகளுக்குள் பரவியுள்ளது. அந்தநாட்டு அரசாங்க அலுவலகங்கள் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த தீப்பரவலினால், 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்த நாட்டு தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்த காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *