உலகம்

நேபாளத்தின் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சமூக ஊடகத் தடை மற்றும் அரசாங்க ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட Gen Z போராட்டத்தில் உயிரிழந்தவர்களைத் தியாகிகளாக அறிவித்து, அவர்களது குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் (நேபாள ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும் என நேபாளத்தின் இடைக்கால பிரதமரான சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.

அவர் பதவியேற்றபின்னர் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு | Nepal Protest Victims Declared Martyrs

அத்துடன் வன்முறையின்போது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சுசீலா கார்கி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆறு மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *