இலங்கை

சலுகைகளை பெற்றுக்கொண்ட பிரதியமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புகூற மாட்டார்கள் என்று சபாநாயகர் இந்த வாரம் தெளிவாக தெரிவித்துள்ளார்.

எனவே, அவர்களை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கருத வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அவர்கள் சலுகைகளைக் கோர முடியாது.

அதன்படி, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகளை நான் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

பிரதி அமைச்சர்கள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டாம் என்று அரச ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *