இலங்கை

800 மில்லியன் ரூபா முறைகேடு அர்ஜுனவை விசாரிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க மீது சுமத்தப்பட்டுள்ள 800 மில்லியன் ரூபா நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை விரைவுபடுத்துமாறு சிவில் புலனாய்வு முன்னணி, லஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்வைத்த பின்னர், முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹாவத்த ஊடகங்களுக்கு உரையாற்றுகையில்,

அர்ஜுன ரணதுங்க கனிம வள மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த நிதி முறைகேடு நடந்ததாகக் கூறினார்.

அந்த நேரத்தில் தம்மிக்க ரணதுங்க பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்தார் என்றும், இந்த இரண்டு சகோதரர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணை தற்போது தேக்கமடைந்துள்ளதாகவும், விசாரணை இவ்வாறு தேக்கமடைந்திருப்பது சந்தேகத்திற்குரியதாக கருதப்பட வேண்டும் என்றும் மஹாவத்த மேலும் கூறினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *