இலங்கை

நாட்டை மீட்ட தலைவரை வீட்டை விட்டு துரத்தினர்

எந்தளவுக்கு அதிகாரங்களை பிரயோகித்தாலும் அநுரகுமாரவுக்கு மகிந்த பயந்தவர் அல்ல, அவர் வானமே இடிந்து விழுந்தாலும் குழப்பமடைபவர் அல்ல என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சஞ்ஜீவ எதிரிமான்ன இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்த தலைவரை வீட்டில் இருந்து வெளியேற்றும் சந்தர்ப்பமாக இது இருக்கின்றது. மகிந்த ராஜபக்ஸ என்பவர் வானமே இடிந்து விழுந்தாலும் குழப்பமடைபவர் அல்ல. அவர் தங்காலையில் இருந்தே கடந்த காலங்களில் அரசியல் தீர்மானங்களை எடுத்தார். இப்போது அவர் அங்கு செல்வதின் ஊடாக புதிய சந்தர்ப்பமொன்று உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

எந்தவொரு தலைவரும் வாழ்க்கை முழுவதும் அரசியல் செய்வார்கள். இந்த விடயம் அரசாங்கத்திற்கு சிலவேளை வித்தியசாமாக இருக்கலாம். அநுரகுமார திஸாநாயக்க ஓய்வு பெற்றாலும் வீட்டிலேயே அடைந்து கிடைக்கப் போவதில்லை. அவருக்கு இந்த வீட்டை கொடுப்பதற்காக தீர்மானத்தை கொண்டு வருவதற்காவது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஸ, அநுரகுமாரவின் அரசியல் அதிகாரங்களுக்கு பயமில்லை. அரசியல் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *