2029 ஆம் ஆண்டில் ”ஐஸ்” லாந்திலா நாமல் ஜனாதிபதி

நாமல்ராஜபக்ச 2029 ஆம் ஆண்டு ”ஐஸ்”லாந்திலா ஜனாதிபதியாக போகிறார் எனக் கேள்வி எழுப்பிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ஐஸ் போதைப்பொருள்காரர்களும்,பிணைமுறி மோசடியாளர்களும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள் எனவும் கூறினார்
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கைக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இந்த நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை உருவாக்கி போதைப்பொருள் வியாபாரிகளையும்,பாதாள குழுக்களையும் பாதுகாத்தவர்கள் கலக்கமடைந்து பாராளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தான் ஐஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டி ல் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் அவரது அரசியல் கட்சியின் உறுப்பினர் என்று அவருக்கு நினைவு படுத்துகின்றோம்.
நாமல் ராஜபக்ச 2029 ஆம் ஆண்டு ”ஐஸ்”லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்?.ஐஸ்லாந்து இந்த விடயத்தை அறிந்தால் இலங்கையை விமர்சிக்கும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.அதாவது ”ஐஸ்”காரர்களும், பிணைமுறி மோசடியாளர்களும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.இவ்விரு தரப்பினரும் அண்மையில் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
ஆம் நாங்கள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வந்தோம்.அரசாங்கம் ஏன் அதனை பிடிக்கவில்லை என்பதே நாமல் ராஜபக்சவின் தர்க்கம். துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய வேண்டும். எதிர்கட்சித் தலைவர் 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கும், இந்த 2 ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக குறிப்பிடுகிறார்.முதலில் இவர் பதவிக்கு ஏற்றாட் போல் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.சட்ட நடவடிக்கை எடுக்கும் போது திணறமாட்டோம் என்று கூறியவர்கள் இன்று பாராளுமன்றத்தில் கூச்சலிடுகின்றனர் என்றார்.
![]()