நாமல் விரைவில் கைதாவாரா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை போன்று தானும் கைது செய்யப்படலாம் என்றும், அவ்வாறு கைது செய்யப்பட்டால் ரணிலுக்கு வந்ததை போன்று தனக்காகவும் வருமாறு கூறுவதற்காகவே நாமல் ராஜபக்ஷ தற்போது கிராமத்துக்கு கிராமம் போகின்றார் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வசந்த சமரசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, கடன் பத்திரத்தைக்கூட திறக்க முடியாத நிலைமைக்கு நாட்டை கொண்டு சென்றது. அவ்வாறு செய்தவர்கள் இப்போது கிராமத்துக்கு கிராமம் போகின்றனர். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை போன்று தானும் கைது செய்யப்பட்டால் தனக்காகவும் வருமாறு கூறுவதற்காகவே அவ்வாறு கிராமங்களுக்கு போகின்றனர்.
இவர்கள் கிராமத்துக்கு கிராமம் அலல்ல. வீட்டுக்கு வீடு சென்றாலும் ராஜபக்ஷக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடையாது என்பதனை முழு நாட்டு மக்களும் அறிவார்கள் என்றார்.
![]()