இலங்கை

இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு ‘வெளிப்புற முயற்சிகளுக்கு இடமில்லை’ எனத் திட்டவட்டமாகத் தெரிவிப்பு

வெளிநாட்டுத் தலையீடுகள் தற்போதைய தேசிய முயற்சிகளுக்குத் தடையாக மட்டுமே அமையும் என்றும், மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

​ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் அண்மைய அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

​சர்வதேச நடவடிக்கை தொடர்பான அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

​இலங்கையர்கள் அனைவரும் இனம், மதம், வகுப்பு மற்றும் சாதி அடிப்படையில் பாகுபாடு இல்லாமல், தமது பன்முகத்தன்மையை மதித்து, கொண்டாடும் ஒரு நாட்டிற்காக உழைக்க அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இலங்கையில் இனவாதம் அல்லது தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

​இலங்கை உள்நாட்டு செயல்முறைகள் மூலம் இந்த வழியில் முன்னேறிச் செல்லும்போது, சர்வதேச சமூகத்தின் புரிதல், ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு வரவேற்கப்படுவதாகவும் பாராட்டப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *