இலங்கை

நாட்டின் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டுக்கு நல்லது

நாட்டின் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டுக்கு நல்லது. என்றாலும் அவர் பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கடட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (7) ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற தானசாலை நிகழ்வை ஆரம்பித்து வைத்து, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இ்வ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன். என்றாலும் அதுதொடர்பான எந்த தயார் நிலையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அவர் பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம் காலம் பார்த்து செல்வார். என்றாலும் இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதையக்கு இடம்பெறவில்லை.

அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன. அந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைத்துக்கொள்ள முடியுமாகும் என நம்புகிறோம்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியிள் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (7) இருந்தது. என்றாலும் ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆராேக்கியத்தை கருத்திற்கொண்டு, ஆண்டு நிறைவி விழாவை பிற்போடுவதற்கு நாங்கள் தீர்மானித்தோம். ரணில் விக்ரமசிங்க இன்னும் ஒரு சில நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என வைத்தியர்களின் ஆலாேசனைக்கமையவே இந்த தீர்மானத்தை நாங்கள் மேற்கொண்டாேம்.

என்றாலும் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை இந்த மாதம் 20 அல்லது 21ஆம் திகதி நடத்துவதற்கே தீர்மானித்திருக்கிறோம். இதுதொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *