ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து 8எலும்புக் கூடுகள்; குழப்பகரமான நிலையில் புதைப்பு

செம்மணி மனித புதைகுழியில் எட்டு மனித எலும்புக்கூடுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது குழப்பகரமான நிலையில் புதைக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 43 வது நாளாக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் செ.லெனின்குமார் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,இந்த மனித எலும்பு தொகுதிகள் நாளைய தினம் (இன்று) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படும்.
குறித்த மனித எலும்புகளின் நீளம் தீர்மானிக்க முடியாத ஒரு சூழல் இருக்கிறது. முழுமையாக அறிந்தெடுக்கப்பட்ட பின்னரே அதில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருக்கிறதா என்பதை அனுமானிக்க முடியும்.
அகழ்வு பணிகளின் போது மூன்று சட்டை பொத்தான்களும் ஒரு காசும், கையில் கட்டக்கூடிய சிதைவடைந்த தாயத்தும் எடுக்கப்பட்டது.
பிளவடைந்த நிலையில் உள்ள மண்டை ஓடுகள் தொடர்பில் தற்போது கருத்து தெரிவிக்க முடியாத. அது மனித என்புத் தொகுதிகளின் ஆய்வு முடிவடைந்த பின்னரே அந்த விடயத்தை சொல்லக்கூடியதாக இருக்கும் – என்றார்.
![]()