ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
நியமிக்கப்பட்டவர்களில், 17 விசேட தர நீதித்துறை அதிகாரிகளும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு சிரேஷ்ட அரச சட்டத்தரணியும் உள்ளடங்குகின்றனர். அரசியலமைப்பின் 111(2) ஆம் சரத்தின் படி ஜனாதிபதி இந்த நியமனங்களை மேற்கொண்டார்.
புதிதாக மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு:
மாவட்ட நீதிபதிகள்: எஸ்.எஸ்.கே. விதான, ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க, ஏ.எம்.எம். றியால், டி.பி. முடுன்கொடுவ, ஜே. கஜனிதீபலன், ஜி.என். பெரேரா, ஏ. ஜூட்சன், டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க, ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிட்டிய, டி.எம்.ஆர்.டி. திஸாநாயக்க, மற்றும் எம்.ஐ.எம். ரிஸ்வி.
மேலதிக மாவட்ட நீதிபதிகள்: எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத், எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன, மற்றும் டி.எம்.ஏ. சேனவிரத்ன.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்: டி.எம்.டி.சி. பண்டார.
நீதவான்கள்: ஏ.ஏ. ஆனந்தராஜா மற்றும் கே.டி.என்.வி. லங்காபுர.
சிரேஷ்ட அரச சட்டத்தரணி: ஏ. ஜயலக்ஷி டி சில்வா.
![]()