இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டுக்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சிகளிலும் உள்ள அரசியல் தலைவர்களையும் அழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டிற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறி, கட்சி உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த யோசனை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து கட்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளார்.

அதேநேரம் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில், கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் அல்லாமல், வேறு ஒரு நடுநிலையான இடத்தில் கட்சியின் மாநாட்டை நடத்தவும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில் இம்முறை நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு மாற்று திசையில் பயணிக்கும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *