உலகம்

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் ஆடைக் கைத் தொழில் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆடைக் கைத்தொழில்த் துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பருத்தி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 30ம் திகதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டு இருந்த வரிவிலக்கு மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்கும் என்றும், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அரசின் அறிவிப்பு ஆடைத் தொழில் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *