இலங்கை

செம்மணிப் புதைகுழியில்  ஒன்றோடு ஒன்று பிணைந்து கட்டித் தழுவியவாறு இரு எலும்புக் கூடுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றோடு ஒன்று பிணைந்து கட்டித் தழுவியவாறு இரண்டு மனித எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழியில் கடந்த வெள்ளிக்கிழமை 37வது நாளாக அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது 177 மற்றும் 178 என இலக்கமிடப்பட்ட இரண்டு மனித எலும்பு கூடுகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டது.

இதற்கு முன்னரும் ஒரு தடவை செம்மணி மனித புதைகுழியில் கட்டுத்தழுவியவாறு பெரிய மற்றும் சிறிய மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *